Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபந்துலவின் காலை வாரும் ரயில் சாரதிகள் சங்கம்

பந்துலவின் காலை வாரும் ரயில் சாரதிகள் சங்கம்

புதிதாக 50 ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், அது நடைமுறைக்கு உட்படுத்த முடியாது என ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிய மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் ரயில்வே திணைக்களத்துடன் கலந்துரையாடிய போதிலும் அவ்வாறான விடயம் தொடர்பில் தமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு அலுவலக ரயில்களின் வருகையினால் ஏற்படும் நெரிசல் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான நடைமேடைகள் காணப்படுவதே அதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை நடைமுறையில் செயல்படுத்துவதில் சிக்கல் இருந்தாலும், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இது குறித்து ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

எவ்வாறாயினும், இடைநிறுத்தப்பட்டுள்ள இரவு அஞ்சல் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles