Sunday, December 21, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு"ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மாத்திரமே வைத்திருக்க முடியும்"

“ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மாத்திரமே வைத்திருக்க முடியும்”

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய 7 முக்கிய திருத்தங்கள் அடங்கிய யோசனைகளை அரசாங்கத்தில் இருந்து விலகிய 9 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கட்சித் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட யோசனைத் தொடர் நேற்று (01) பிரதமர் மற்றும் நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மாத்திரமே வைத்திருக்க முடியும் என்ற பிரேரணையை அவர்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள் கையொப்பமிடுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles