இந்திய கடனுதவி அடங்கலாக நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற 330 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை ஒளடத கொள்வனவுக்காக பயன்படுத்தப்படவில்லை என கோப் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் ஒளடத தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.