ஆயிஷா சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் அப்பகுதியிலுள்ள பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக நேற்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த குறித்த நபர், தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
எனினும், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டடினார்.