Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 ஆம் திகதிக்கு பின்னர் பேருந்து சேவைகள் இல்லையாம்

6 ஆம் திகதிக்கு பின்னர் பேருந்து சேவைகள் இல்லையாம்

இந்த வாரத்துக்குள் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசாங்கம் முறையான திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவ்வாறு செயற்படுத்தாவிட்டால் இம்மாதம் 6ஆம் திகதி முதல் பேருந்து சேவைகள் இடம்பெறாது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத விதத்தில் நடந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நன்றி. எதிர்ப்பு தெரிவிக்காதவர்களுக்கும் தலையிடாதவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நேற்றைய தினம் (31) முதல் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை அனைத்து தொழில்துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles