பூஸா தொடருந்து நிலையத்துக்கு அருகில் வாகனம் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானமையால், கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாத்தறையிலிருந்து பயணித்த சாகரிகா தொடருந்தில், மகிழுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மகிழுந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.