நாட்டில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 சிறுவர்களில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதில் நால்வர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும், அவர்களுக்குகு சிறப்பு ஊட்டச்சத்து உணவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுகின்றனர்.
பிள்ளைகளுக்கு இந்நிலை ஏற்படாமல் தடுக்க வீட்டுத்தோட்டம் அமைப்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.