ஆயிஷா சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர், இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்க உள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், சந்தேகநபரை விசேட பாதுகாப்பின்கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.