தற்போதைய நெருக்கடி காரணமாக சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
பேக்கரிகள் மூடப்படுவதால் சுமார் 100,000 பேர் தமது வேலையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேக்கரி சூளைகளை (Bakery Oven)இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எரிவாயு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.