பிரபல மோனா லிசா ஓவியத்தை ஒருவர் சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வயோதிப பெண் போன்று வேடமணிந்த ஒருவர் குறித்த ஓவியத்தை சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியத்தின் மீது அவர் கேக் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர் சக்கர நாற்காலியில் அருங்காட்சியகத்திற்கு சென்று லியோனார்டோ டா வின்சியின் இந்த ஓவியத்தை பாதுகாக்கும் குண்டு துளைக்காத கண்ணாடியை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய நபர் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

