நவகத்தேகம – முல்லேகம பிரதேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அத்துடன், தகராறை தீர்க்க வந்த மனைவியின் மூத்த சகோதரனையும் சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் மனைவி (25) மற்றும் மைத்துனன் (32) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரும் காயமடைந்துள்ளதுடன், அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.