Thursday, July 3, 2025
28.4 C
Colombo
அரசியல்பெரும்பாலான நிறுவனங்கள் ஜனாதிபதி - பிரதமர் வசம்

பெரும்பாலான நிறுவனங்கள் ஜனாதிபதி – பிரதமர் வசம்

புதிய அமைச்சரவையின் செயற்பாடுகள் மற்றும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது.

அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புக்கள் போன்ற அனைத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் 1 (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அமுல்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் 42 பொது நிறுவனங்கள் உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் நிதி, பொருளாதாரம், ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் 57 நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி, திறைசேரி, உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் என்பனவும் அதில் அடங்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles