இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளன.









