Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கம் நாளாந்தம் 600 கோடி ரூபா கடன்படுகிறது - அமைச்சர் பந்துல

அரசாங்கம் நாளாந்தம் 600 கோடி ரூபா கடன்படுகிறது – அமைச்சர் பந்துல

நாளாந்தம் அரசாங்கம் 600 கோடி ரூபா கடன்படுவதாகவும், வரலாறு காணாத விதமாக அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முடிவடையும் போது நாட்டின் நாளாந்த வருமானம் 3.2 பில்லியனாக இருந்ததாகவும், அப்போது நாளொன்றுக்கு 4.9 பில்லியன் செலவழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதனால் அரசாங்கம் நாளொன்றுக்கு 1.7 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2019 ஆம் ஆண்டில், தினசரி வருமானம் 5 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன், நாளாந்த செலவு 9.1 பில்லியனாக காணப்பட்டது.

அதற்கமைய, குறித்த வருடத்தில் நாளாந்தம் 4.1 பில்லியன் ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையின்படி, கொவிட் பரவல் மற்றும் வரி குறைப்பு போன்றனவே அரசாங்க வருமானம் குறைவதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டில் அரசாங்கம் நாளொன்றுக்கு 400 கோடி ரூபா வருமானம் ஈட்டுவதாகவும், ஒரு கோடி ரூபாவை செலவழிப்பதாகவும், இதனால் 600 கோடி ரூபா கடனாக பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles