2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது.
ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அதிகபடியாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.