குறைந்த வருமானம் பெறுபவர்கள், மின்சாரத்தை குறைந்தளவில் பாவிப்பவர்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளை தவிர்த்து மின்சார கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு யுனிட் மின்சாரத்தை உருவாக்க ரூ.47.18 செலவாகிறது.
எனினும், அனைத்து துறைகளில் இருந்தும் குறைந்த விலையே வசூலிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை மாதாந்தம் 750 பில்லியன் ரூபாவை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக செலவிடுகிறது.
இருப்பினும், வருடாந்தம் 250 பில்லியன் ரூபாவே வருமானமாக பெறுவதாக அவர் கூறினார்.