மருந்துகளின் விலைகளை அந்நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நோயாளிகள் மட்டுமின்றி தாமும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு உள்ளது.
எனினும் அந்த சபை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.