அரச ஊழியர்கள் மாத்திரமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம். பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு இரு தரப்பினருக்கும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில், வேலைக்கு செல்வதற்கு கூட பாரிய அளவில் செலவழிக்க வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் இந்நாட்டு மக்கள் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.