ஜூன் மாதம் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர்கள் தேவையாக உள்ளது.
எனினும், அதற்கான நிதி தற்போது கையிருப்பில் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.