சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்திமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்வைத்த சமர்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பில் பண்டாரகமை பொலிஸாரின் முதற்கட்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்களும், சீ.ஐ.டியினரும் பல்வேறுப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சிசிடிவி கமராக்கள் எதுவும் இல்லை என்பதால், அந்த பகுதியில் நிகழ்ந்த தொலைப்பேசி தொடர்புகள் குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.