எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், தமது எரிவாயு கொள்கலன் விநியோகத்தினை லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.