ஜேர்மனியில் இடம்பெற்ற தடகள போட்டியில் யுபுன் அபேகோன், புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
அவர் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட போட்டியில் 10.06 விநாடிகளில் ஓட்ட தூரத்தினை நிறைவு செய்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக யுபுன் அபேகோன் இத்தாலியில் இடம்பெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.