வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார்.
கோட்டாகோகம மற்றும் மைனகோகம மீதான தாக்குதல் தொடர்பான கோட்டை நீதவான் நீதிமன்ற விசாரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட குழுவினர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்டோர் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபர் சனத் நிஷாந்தவின் கடவுச்சீட்டு வழக்கு ஒன்று தொடர்பில் வேறு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரேணுகா பெரேரா ஆகியோரின் கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளனர்.