Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் பெற்றது தவறில்லை - அதை செலவழித்த விதம் தான் பிரச்சினை

கடன் பெற்றது தவறில்லை – அதை செலவழித்த விதம் தான் பிரச்சினை

கடன் பெற்றதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தான் கருதவில்லை எனவும், அது செலவிடப்பட்ட விதமே காரணம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாடும் கடன் வாங்குவது தவறில்லை என்றும், கடன் வாங்காமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கடன் தேவைப்படும் போது, அரசாங்கத்தின் முகவர் என்ற வகையில் மத்திய வங்கி அதற்கான வசதிகளை செய்து கொடுத்தாலும், பெறப்பட்ட கடனை எவ்வாறு செலவழிப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்.

இலங்கையில் தற்போது பாரிய பாதீடு பற்றாக்குறை உள்ளதால், எதாவதொரு கடனைப் பெற்றவுடன், அது நாட்டில் அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஒரு பகுதி முதலீடு செய்யப்படுகிறது.

எனினும், அந்த முதலீடுகளால் நாடு நன்மை அடைந்ததா என்பதும் கேள்விக்குறியே என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles