Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை - கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்குமாம்

முட்டை – கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்குமாம்

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மீன், இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கோழி தீவனம் அதிகரிப்பு காரணமாக இன்று ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 31 ரூபாவாக அதிகரித்துள்ளது.

65 முதல் 70 ரூபா வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழி தீவனம், தற்போது 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் முட்டை மற்றும் கோழியிறைச்சியின் விலை அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles