Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலர் எதிர்காலத்தில் வேலையை இழக்க நேரிடும் - மத்திய வங்கி ஆளுநர்

பலர் எதிர்காலத்தில் வேலையை இழக்க நேரிடும் – மத்திய வங்கி ஆளுநர்

எதிர்காலத்தில் மேலும் பலர் வேலையை இழக்க நேரிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பெரும்பாலான மக்கள் எதிர்காலத்தில் வேலையை இழக்க நேரிடும். அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வரக்கூட பணம் இல்லாத நிலையில் இருக்கிறோம்.

அடுத்த ஆண்டுக்குள் நாம் சரியான பாதையில் சென்றாலும், இந்த நாடு முன்னேறாது. நாட்டின் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று கூற முடியாது. நம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வாரத்திற்கு கூட போதாது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கொண்டு வரப்படுகிறது” என்றார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles