Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்டெக்ஸாஸ் சம்பவம்: சிறார்கள் உட்பட 21 பேர் பலி

டெக்ஸாஸ் சம்பவம்: சிறார்கள் உட்பட 21 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகினர்.

அவர்களில் 18 சிறார்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

18 வயதான ஒருவரினால் நேற்றைய தினம் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தரங்களில் கல்வி கற்ற 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில், சந்தேகநபர் கொல்லப்பட்டார்.

அவர், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமைக்கான நோக்கம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles