முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இணையத்தளம் அல்லது 070-7101-060 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
அரச வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை குறித்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.