Monday, May 12, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு99% தரமற்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன - கோப் குழு

99% தரமற்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன – கோப் குழு

முறையாக பாதுகாக்காத காரணத்தினால், 2011 – 2020 ஆம் ஆண்டு வரை 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் வீணாகியுள்ளதுடன், அதில் 99% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோபா குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடைமுறைப்படுத்தப்படவுள்ள மருந்துகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மருந்துகளை சேமிப்பதற்கான வசதிகளை துரிதப்படுத்துமாறு சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ வழங்கல் பிரிவுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் வெப்பநிலை சரியாக பராமரிக்கப்படாததையும், மத்திய மருந்து கிடங்குகள் மற்றும் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் மருத்துவ பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும் கோப் குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles