மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நஷீத், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மாலைத்தீவின் The Maldives Journal என்ற சஞ்சிகை இதனை தெரிவித்துள்ளது.
மாலைத்தீவு ஜனாதிபதி தற்போது இலங்கையில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில், உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுடன் பல சந்திப்புகளை நடத்தி, ராஜபக்ஷ குடும்பத்தை மாலைத்தீவுக்கு பாதுகாப்பான வழியில் அனுப்பி வைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலகிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ நஷீத்தை அழைத்த விடயத்தை, மாலைத்தீவு அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அழைப்பில், இலங்கையில் நிலைமை சீராகும் வரை தனது குடும்பத்தினர் மாலைத்தீவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதியிடம் மஹிந்த கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ராஜபக்ஷ குடும்பத்திற்கு வசிப்பதற்காக அங்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனி இல்லமொன்று கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த செய்தி தொடர்பில் மஹிந்த தரப்பு எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.