வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வீடுகளை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.