Thursday, October 30, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோல் நெருக்கடியால் பிறந்து 3 நாட்களேயான சிசு மரணம்

பெற்றோல் நெருக்கடியால் பிறந்து 3 நாட்களேயான சிசு மரணம்

முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சிசு திடீரென சுகயீனமடைந்ததால், வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டிக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனதால், ஒரு மணிநேர தாமதத்துக்கு பின் குறித்த சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் குறித்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles