நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கான விஜயங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் நியூஸிலாந்து பிரதமரின் அமெரிக்க விஜயம் அமைந்துள்ளது.
நியூஸிலாந்து பிரதமரின் அமெரிக்க விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பு உள்ளடக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.