ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறையினால் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் விடுத்துள்ள உணர்வுபூர்வமான குறிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இவ்வாறு குறிப்பிட்டார்.
‘கோத்தபாய ராஜபக்க்ஷ இதைப் படித்து குற்ற உணர்ச்சியிருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே பொறுப்பு. இந்த நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதற்கு பொறுப்பு. ‘ என தெரிவித்துள்ளார்.