இலங்கைக்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் கேரி ரைஸ் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சரியான நேரத்தில் தீர்க்க சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.