பிரதமரின் உத்தரவின் பேரில் கோப் குழுவினால் லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போதுமானளவு எரிவாயு கிடைக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்தம் 80,000 சிலிண்டர்களை விநியோகிக்கலாம் எனவும் அண்மையில் லிட்ரோ அறிவித்திருந்தது.
எனினும் காலநிலை சீர்க்கேட்டை காரணம் காட்டி, கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படாமல் இருந்தது.
இது தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன், விசாரணை முன்னெடுக்குமாறு கோப் குழுவுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.