பிரித்தானியாவில் இந்த வாரம் இரத்த மழை பெய்யவுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஒரன்ஞ் நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும்.
எனவே, மழை பெய்யும்போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடியும்.
