Saturday, May 3, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு , மின்சாரம், நீர், எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் - மத்திய வங்கி...

எரிவாயு , மின்சாரம், நீர், எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்

நாடு முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி வளாகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், நாட்டின் வரி வருமானம் தற்போது குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்க வருவாயை அதிகரிக்க எதிர்காலத்தில் எரிவாயு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்த பரிந்துரை செய்வதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை இயக்கும் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தான் இவ்வாறானதொரு சிபாரிசு செய்ய நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles