Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டிலிருந்து பணியாற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு?

வீட்டிலிருந்து பணியாற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு?

எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில், செலவினங்களைக் குறைப்பதற்காக, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, வீடுகளில் இருந்து கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு சில தரப்பினர் யோசனை முன்வைப்பார்களாயின், சம்பளத்தைக் குறைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அந்த அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறையால், அரச செலவினங்களைக் குறைப்பதைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களை அலுவலகத்திற்கு சேவைக்கு அழைப்பதை வரையறைக்கு உட்படுத்துமாறு அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles