Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

போராட்டத்தை நடத்துவதன் ஊடாக அவர்களின் சிறப்புரிமைகளை மீறப்படலாம் என்பதால், போராட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

பொலிஸாரின் கோரிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.​

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸாரின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles