Thursday, May 1, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்குரங்கு அம்மை அமெரிக்காவிலும்

குரங்கு அம்மை அமெரிக்காவிலும்

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் குரங்கு அம்மை (Monkeypox)என்ற நோய் பரவி வருகிறது.

1970 இல் ஆபிரிக்காவில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டது.

குரங்குகளிடமிருந்து பரவும் வைரஸினால் இந்த நோய் பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த Monkeypox வைரஸ் தற்போது பிரித்தானியா, போர்த்துக்கல், ஸ்பானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலில் பிரித்தானியர் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதுடன், தற்போது 8 பேர் குறித்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

போர்த்துக்கல் மற்றும் ஸ்பானியா ஆகிய நாடுகளில் 40 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்படடுள்ளார்.

காய்ச்சல், உடல்வலி, முகம், கைகால்கள் மற்றும் உள்ளங்கால்களில் சிராய்ப்பு போன்றவை இந்த நோய்க்கு அறிகுறிகளாகும்.

தற்போது ஐரோப்பாவில் பரவி வரும் குரங்கு அம்மையானது உலகின் பிற பகுதிகளிலும் பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles