Wednesday, December 3, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலிமுகத்திடல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

காலிமுகத்திடல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கலவரத்தின்போது காயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலஹிட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

அவரது பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றதுடன், தலையிலும் மார்பு பகுதியிலும் ஏற்பட்ட உள்ளக காயங்களால் அவர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles