காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பங்கள் தொடர்பில் நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதன்போது, வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.