பலப்பிட்டிய – படபொல – மானம்பிட்ட பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது,பிறிதொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், வீட்டின் உரிமையாளர் அவரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.