எரிவாயு கொள்கலன் விநியோகம் தாமதிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்ட போதும், மோசமான காலநிலை காரணமாக கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படவில்லை.
இதனால் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தாமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது.