தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக தேயிலை ஏற்றுமதி பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக மிகவும் குறைந்த அளவில் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.
தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தரம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் அந்நிய செலாவணியாக இலங்கைக்கு கிடைத்து வந்தது.
முன்னதாக கடந்த வருடம் சில இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தேயிலை உற்பத்தியும் பாதிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.