ஒரு நாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் இன்று (17) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.immigration.gov.lk இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது 0707 10 10 60 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.
காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.