Saturday, January 18, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகலவரம் தொடர்பில் 664 பேர் கைது

கலவரம் தொடர்பில் 664 பேர் கைது

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த 791 புகார்களுக்கு அமைய, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 272 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 258 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தும் (444) தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles