ஸ்வர்ணவாஹினியின் நாடாளுமன்ற நிருபர் மற்றும் மற்றுமொரு ஊடகவியலாளரின் கையடக்க தொலைபேசிகள் இந்திக்க அனுருத்த மற்றும் டி வீரசிங்க எம்.பிகளால் பறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எம்.பிகள் பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகியோரின் தொலைபேசிகளையே பறித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாசவும் இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.