இன்றிரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மாத்திரமே இயங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இரவு இயக்கப்படவிருந்த தபால் ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.